“அடச்சீ.. பிரார்த்தனை செய்யப் போன இடத்தில் இப்படியா..?” 4 சிறுவர்களிடம் அநாகரீகமாக அத்துமீறிய பாதிரியார்.. நெஞ்சை பதற வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடச்சீ.. பிரார்த்தனை செய்யப் போன இடத்தில் இப்படியா..?” 4 சிறுவர்களிடம் அநாகரீகமாக அத்துமீறிய பாதிரியார்.. நெஞ்சை பதற வைக்கும் பின்னணி..!!

Published

on

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள வாலென்சியா புனித வின்சென்ட் ஃபெரர் தேவாலயத்தின் கத்தோலிக்க பாதிரியாரான பாதர் சிப்ரியன் பின்டோ சிறுவர்களை நீண்ட காலமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறி மங்களூரு தெற்கு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் ஒருவன், தேவாலயத்திற்கு பிரார்த்தனை செய்யச் சென்றபோது பாதிரியார் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். அப்போது, மேலும் நான்கு சிறுவர்களும் தங்களுக்கு இதேபோன்ற கசப்பான அனுபவங்கள் நேர்ந்ததாக வெளிப்படுத்தியதை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் அவனது பெற்றோர்கள் மங்களூரு மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து அளித்த புகாரின் பேரில், பாதிரியார் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீசில் புகார் அளிக்கப்பட்டதும் தலைமறைவான பாதிரியார் சிப்ரியன் பின்டோவைத் தேடத் தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, ஹாசன் மாவட்டம் சகலேஷ்புராவில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த அவரைப் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in