“என்னை வீட்டிற்கு அழைத்து செல்லுங்க… ” கண்ணீருடன் கைகளை கூப்பி கெஞ்சிய 78 வயது முதியவர்.. ஆனா குடும்பத்தினர் சொன்ன ‘அந்த’ கொடூர வார்த்தை.. முதியோர் இல்லத்தில் அரங்கேறிய மனிதநேயமற்ற அவலம்.!!! – cinefeeds
Connect with us

CRIME

“என்னை வீட்டிற்கு அழைத்து செல்லுங்க… ” கண்ணீருடன் கைகளை கூப்பி கெஞ்சிய 78 வயது முதியவர்.. ஆனா குடும்பத்தினர் சொன்ன ‘அந்த’ கொடூர வார்த்தை.. முதியோர் இல்லத்தில் அரங்கேறிய மனிதநேயமற்ற அவலம்.!!!

Published

on

ஹரியானா மாநிலம் கர்னாலில் உள்ள ‘சுபத்ரா மானவ் கல்யாண் சேவா சன்ஸ்தான்’ என்ற முதியோர் இல்லத்தில், 23 ஆண்டுகள் தன் குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்த 78 வயது முதியவரை அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்துச் செல்ல மறுத்த சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநராகப் பிழைப்பு நடத்தி வந்த இந்த முதியவர், முதுமை மற்றும் காசநோய் காரணமாகத் தன்னைத்தானே கவனித்துக் கொள்ள முடியாமல் 6 மாதங்களுக்கு முன்பு இந்த இல்லத்தில் தஞ்சமடைந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், இல்லத்தின் நிர்வாகம் மூலம் அவரது மனைவி, மகன் மற்றும் மகள் வரவழைக்கப்பட்டனர். 23 ஆண்டுகளுக்குப் பிறகு தன் குடும்பத்தினரைக் கண்டதும், தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு அந்த முதியவர் கண்ணீருடன் கைகூப்பி மன்றாடியும், அவரது குடும்பத்தினரின் மனம் உருகவில்லை.

அந்த முதியவருக்குக் காசநோய் இருப்பதால் தங்களால் அவரைத் தங்களுடன் அழைத்துச் செல்ல முடியாது என்று குடும்பத்தினர் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். மேலும், தங்களின் தொலைபேசி எண்ணை இல்லத்தின் நிர்வாகியிடம் கொடுத்துவிட்டு, “அவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு அவர் இறந்துவிட்டால் எங்களுக்குத் தகவல் கொடுங்கள், இறுதிச் சடங்குகளை நாங்களே செய்து கொள்கிறோம்” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினர். இல்லத்தின் நடத்துனர் நீலு குடும்பத்தினருக்கு எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவர்கள் கேட்கவில்லை. மனித உறவுகளின் வீழ்ச்சியையும், சுயநலத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்தச் சம்பவத்திற்கு இடையே, தற்போது அந்த முதியவருக்கு அந்த ஆசிரமத்திலேயே தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in