“அய்யோ கடவுளே.. சுழற்காற்றில் பறந்த 4 மாதக் குழந்தை…” 10 நிமிடங்களுக்குப் பின் மரப்பொந்தில் நடந்த அதிசயம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அய்யோ கடவுளே.. சுழற்காற்றில் பறந்த 4 மாதக் குழந்தை…” 10 நிமிடங்களுக்குப் பின் மரப்பொந்தில் நடந்த அதிசயம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

Published

on

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்திலுள்ள கிளார்க்ஸ்வில் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த சுழற்காற்றின்போது 4 மாதக் குழந்தை ஒன்று தொட்டிலோடு வான்நோக்கி தூக்கிச் செல்லப்பட்டு, அற்புதமாக உயிர் பிழைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிட்னி மூர் என்பவரது வீட்டை இந்தச் சூறாவளி தாக்கியபோது, வீட்டின் கூரை முற்றிலுமாகப் பிச்சியெறியப்பட்டது. அப்போது அவரது 4 மாதக் குழந்தை லார்ட், தொட்டிலோடு காற்றில் உறிஞ்சப்பட்டதைக் கண்டு, அவனது தந்தை அரமிஸ் அதைத் தடுக்க முயன்றார்; ஆனால், அவரும் பலத்த காற்றினால் தூக்கி வீசப்பட்டார். அதே நேரத்தில், சிட்னி தனது 1 வயது மூத்த மகனைக் காப்பாற்ற அவனது உடல் மீது படுத்துக் கொண்டார்; அடுத்த நொடியே வீட்டின் சுவர்கள் அவர்கள் மீது இடிந்து விழுந்தன.

சூறாவளி கடந்து சென்ற பிறகு, ஒட்டுமொத்த வீடும் இடிபாடுகளாகக் காட்சியளித்தது. சிட்னி, அரமிஸ் மற்றும் அவர்களது மூத்த மகன் ஆகியோர் காயங்களுடன் உயிர் பிழைத்த போதிலும், காற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 மாதக் குழந்தை எங்குள்ளது என்று தெரியவில்லை. அந்தப் பெருமழையில், சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக அவர்கள் இடிபாடுகளுக்கு இடையே கதறியபடி குழந்தையைத் தேடினர். அப்போது, வீட்டின் அருகே விழுந்து கிடந்த ஒரு மரத்தின் பொந்துக்குள், யாரோ மெதுவாகத் தூக்கி வைத்தது போல அந்தக் குழந்தை பத்திரமாகக் கிடப்பதை தந்தை கண்டுபிடித்தார். இவ்வளவு பெரிய இயற்கைச் சீற்றத்தில் சிக்கிய பிறகும், சிறு காயங்களுடன் குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட இந்த அதிசயத்தை, கடவுளின் பேரருள் என்று நெகிழ்ச்சியோடு அவரது குடும்பத்தினர் பகிர்ந்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in