CRIME
BREAKING: பிக்பாஸ் பிரபலம் ஜிபி முத்துவின் தம்பி மனைவி உட்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு… பெரும் பரபரப்பு..!
பிரபல யூடியூபரும், திரைப்பட நடிகருமான ஜி.பி.முத்துவின் வீட்டின் அருகே கோவில் கட்டுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே நீண்டநாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, கடந்த 20-ந் தேதி நள்ளிரவில் எதிர் தரப்பினர் ஜி.பி.முத்துவின் வீட்டின் முன்பாக கோழியை அறுத்து பலி கொடுத்துப் பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை ஜி.பி.முத்துவின் குடும்பத்தினர் தட்டிக்கேட்டபோது இருதரப்பிற்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது.
இந்த மோதலின் போது, எதிர் தரப்பினர் இரும்பு கம்பி மற்றும் அரிவாளால் தாக்கியதில் ஜி.பி.முத்துவின் தம்பி மனைவி அனிதா மற்றும் உறவினர் இளையபெருமாள் ஆகிய இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து ஜி.பி.முத்து அளித்த புகாரின் அடிப்படையில், அப்பகுதியைச் சேர்ந்த பரமசிவன், மாடசாமி, ஆத்திசெல்வம் உட்பட 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேவேளையில், எதிர் தரப்பைச் சேர்ந்த முத்து மகேஷ், சுந்தரவேல் உள்ளிட்டோரை ஜி.பி.முத்து, அவரது தந்தை கணேசன், மனைவி அஜிதா, தம்பி மனைவி அனிதா, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து பிளாஸ்டிக் நாற்காலிகளால் தாக்கியதாக மறுதரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் ஜி.பி.முத்து உட்பட 10 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
