CRIME
“அடப்பாவமே! மருத்துவமனையிலேயே இப்படியொரு கலவரமா..?” நோயாளி உயிரிழப்பு… கட்டுக்கடங்காத ஆத்திரத்தால் உறவினர் செய்த அதிர்ச்சி காரியம்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடெம் மாவட்டத்தில் உள்ள எம்.ஐ.எம்.எஸ் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்தார். மருத்துவமனையின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டி, அவருடைய உறவினர்கள் கடும் கோபமடைந்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை சொத்துக்களை அடித்து நொறுக்கியதுடன், வரவேற்புப் பகுதியில் தீ வைத்ததால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. இந்த வீடியோ இணையதளத்தில் பரவி வருகிறது.
Hospital chaos : Outraged relatives set fire to the reception area of MIMS Hospital in Bhadradri Kothagudem district Telangana
The violent protest erupted following the death of a patient undergoing treatment at the private facility
Angry family members damaged hospital… pic.twitter.com/bxqrIGupxB— Ramesh Tiwari (@rameshofficial0) July 26, 2026
இந்த வன்முறைச் சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டு நோயாளிகளும் ஊழியர்களும் அச்சமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் காவல்துறையினர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மருத்துவ அலட்சியக் குற்றச்சாட்டு மற்றும் சொத்து சேதம் ஏற்படுத்தியது தொடர்பாக இருதரப்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
