LATEST NEWS
அண்ணாமலையின் அடுத்த ஸ்கெட்ச்..! பாஜக கோட்டையில் பாயும் “வி தி லீடர்ஸ்”… அதிர்ச்சியில் ஆடும் டெல்லி மேலிடம்..!!
பாஜகவில் இருந்து விலகி ‘வி தி லீடர்ஸ்’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கிய அண்ணாமலை, சுமார் 20 லட்சம் உறுப்பினர்களுடன் ‘போதையில்லா பொள்ளாச்சி’ மாநாட்டைப் பிரம்மாண்டமாக நடத்திக் காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி கன்னியாகுமரியில் ‘என் குமரி பசுமை குமரி’ என்ற அடுத்தகட்ட மாநாட்டை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பாரம்பரியமாகவே பாஜகவின் பலமான கோட்டையாகக் கருதப்படுவதால், அங்கு அண்ணாமலை மாநாடு நடத்துவது அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்களைத் தன் பக்கம் ஈர்க்கும் ஒரு உத்தியாகவே அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நீட் தேர்வு விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்திருந்த அண்ணாமலை, வரவிருக்கும் மாநாடுகளிலும் பாஜகவிற்கு எதிரான தனது விமர்சனங்களைத் தொடர்ந்து முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தொடர் நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக பாஜகவின் வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
