“தலைவர் ஒரு வார்த்தை சொன்னா போதும்… இந்த நிமிஷமே பதவியை தூக்கிப்போட்டுட்டு போயிட்டே இருப்பேன்…” வன்னியரசு பரபரப்பு பேச்சு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தலைவர் ஒரு வார்த்தை சொன்னா போதும்… இந்த நிமிஷமே பதவியை தூக்கிப்போட்டுட்டு போயிட்டே இருப்பேன்…” வன்னியரசு பரபரப்பு பேச்சு..!!

Published

on

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அமைச்சர் வன்னியரசு, தனது அரசியல் பயணம் மற்றும் அமைச்சர் பதவி குறித்துப் பேசினார். “80 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் ஊரில் இப்போதுதான் பேருந்து வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறேன். பேருந்து விடுவதற்கே நான் அமைச்சராக வேண்டியிருக்கிறது” என்று அவர் கூறினார்.

மேலும் தொடர்ந்த அவர், “என்றைக்கோ நான் படுகொலை செய்யப்பட்டிருப்பேன், அதிலிருந்து தப்பித்து வந்தவன் தான் நான். இன்றைக்கே தலைவர் என்னை அழைத்து இந்த அமைச்சர் பதவியை தூக்கிப்போட்டுவிட்டு போகச் சொன்னால் கூட உடனே தூக்கிப்போட்டுவிட்டு போய்விடுவேன்” என்று தெரிவித்தார். அமைச்சர் பதவியை விட மக்களுக்குச் செய்யக்கூடிய பணிகளே எனக்கு மிகவும் முக்கியம் என்ற நோக்கில் அவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in