“இன்னும் கொஞ்ச நாள் விளையாடியிருக்கலாமே.. பின்னாடி கண்டிப்பா வருத்தப்படுவாரு…” விராட் கோலியின் ஓய்வு குறித்து கபில்தேவ் ஓபன் டாக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இன்னும் கொஞ்ச நாள் விளையாடியிருக்கலாமே.. பின்னாடி கண்டிப்பா வருத்தப்படுவாரு…” விராட் கோலியின் ஓய்வு குறித்து கபில்தேவ் ஓபன் டாக்..!!

Published

on

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி, மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். தற்போது ஒருநாள் கிரிக்கெட் வடிவில் மட்டும் விளையாடி வருகிறார். 37 வயதானாலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் போட்டியில் சதம் விளாசினார்.

வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற உலக கோப்பை இறுதிப் போட்டியுடன் டி20 வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் முடிவடைந்ததையும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் இன்னும் சிறிது காலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

Advertisement

இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி இன்னும் சிறிது காலம் விளையாடியிருக்கலாம் என கபில்தேவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கபில்தேவ் கூறியதாவது, “கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது குறித்து எனக்கு வருத்தம் உள்ளது. இன்னும் சில ஆண்டுகள் கழித்து, தான் இன்னும் சிறிது காலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியிருக்கலாமே என்று விராட் கோலியே வருத்தப்படக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in