LATEST NEWS
“UK பொருளாதாரமே சரிவு… அப்புறம் எதுக்கு லண்டன்..?” வெளிநாட்டு பயணத்தை சாடிய அண்ணாமலை..!!
அண்ணாமலை மதுரையில் பேசுகையில், UK-வின் பொருளாதாரமே சரிவில் இருக்கும் போது லண்டனில் என்ன முதலீடுகளை ஈர்க்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்குச் செல்வது பழைய காலத்து அரசியல் என அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்தவே முறையான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதைத்தாண்டி, முதலீடுகளைப் பெற பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் உள்ள நிறுவனங்களை அணுகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
