CRIME
அடச்சீ… இவனுங்களாம் ஒரு வாத்தியாரா..? வகுப்பறைக்குள் மாணவிகளுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்…! கேட்கவே கூசும் தலைமை ஆசிரியரின் அக்கிரமம் அம்பலம்..!!
திருவண்ணாமலை மாவட்டம் வேடந்தவாடி கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த ரவி மற்றும் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வந்த முரளிதரன் ஆகிய இருவரும், பள்ளியில் பயிலும் சிறுமிகளைத் தனியாக அழைத்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த மாணவிகள், தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்துப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
மாணவிகளின் புகாரைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாகத் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மாணவிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தலைமை ஆசிரியர் ரவி மற்றும் ஆசிரியர் முரளிதரன் ஆகிய இருவருமே சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் இருவரும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவர்களுக்குக் பாதுகாப்பு அளித்துக் கல்வி கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே இத்தகைய செயலில் ஈடுபட்டு கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
