LATEST NEWS
“19 வினாடியில் 9 செருப்படி..!” மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர்.. கோச்சிங் சென்டரில் ஆசிரியருக்கு விழுந்த தர்ம அடி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் சேவ்ரஹி பகுதியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில், ஆசிரியர் ஒருவர் மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடம் நடத்தும் போது அந்த ஆசிரியர் மாணவியிடம் ஆபாசமான செய்கைகளில் ஈடுபட்டுச் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, இச்சம்பவம் குறித்துத் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
19 सेकंड में पड़े 9 चप्पल, टीचर द्वारा छात्रा से छेड़खानी पर चप्पल से पिटाई कुशीनगर के सेवरही में एक कोचिंग सेंटर का वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है।
आरोप है कि कोचिंग टीचर ने छात्रा के साथ पढ़ाई के दौरान अश्लील इशारे किए और बाद में छेड़खानी की, बताया जा रहा है कि छात्रा… pic.twitter.com/Wz21Ixhpn6— Pradeep Kumar (@Pradeep39192398) July 27, 2026
இதையடுத்து, ஆத்திரமடைந்த மாணவியின் குடும்பத்தினர் உடனடியாகப் பயிற்சி மையத்திற்கு விரைந்து சென்று, அந்த ஆசிரியரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். 19 வினாடிகளில் 9 செருப்படி விழும் அளவிலான இந்தத் தாக்குதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து சேவ்ரஹி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், இது தொடர்பாக இதுவரை எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டதோ அல்லது ஆசிரியர் கைது செய்யப்பட்டதோ குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
