அடச்சீ.. டாக்டரா இவர்? 100 பெண்களை சீரழித்த கொடூரம்… மருத்துவரின் கொடூர முகத்தை தோலுரித்த செவிலியர்… பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அடச்சீ.. டாக்டரா இவர்? 100 பெண்களை சீரழித்த கொடூரம்… மருத்துவரின் கொடூர முகத்தை தோலுரித்த செவிலியர்… பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் 65 வயதான மருத்துவரிடம் இருந்து ரூ.2 கோடி மிரட்டிப் பணம் பறித்த புகாரில், 2016 முதல் அதே மருத்துவமனையில் பணியாற்றிய கம்லேஷ் என்ற செவிலியர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். மருத்துவருடன் இருந்த அந்தரங்கப் புகைப்படங்களை காட்டி, பொய் வழக்கு மற்றும் கொலை மிரட்டல் விடுத்து செவிலியர் பணம் பறித்ததாக மருத்துவர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் வங்கி கணக்குகள் மூலம் சுமார் ரூ.35 லட்சம் பரிமாற்றம் செய்யப்பட்ட ஆதாரங்களும், காசோலைகள் மற்றும் சிசிடிவி மூலம் கண்காணித்த தகவல்களும் வெளியாகி சட்டப்பூர்வ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

அதேசமயம், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பாக செவிலியர் வெளியிட்ட காணொளியில், அந்த மருத்துவர் 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட ஒரு தொடர் பாலியல் குற்றவாளி என்று பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள பணம் பறிப்பு வழக்கு, மருத்துவரின் பாலியல் அத்துமீறல்களை மூடிமறைக்க புனையப்பட்ட பொய் வழக்கு என்றும், மருத்துவமனை ஊழியர்கள் சிலர் இதற்குக் உடந்தையாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், செவிலியரின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ ஆதாரங்களும் கிடைக்கவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

விசாரணையில், கைது செய்யப்பட்ட செவிலியர் 2020-ல் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்றும், குடும்பப் தகராறு மற்றும் வரதட்சணை தொடர்பான பழைய வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் காவல்துறை கண்டறிந்துள்ளது. தற்போது செவிலியரின் மொபைல் போன் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்து வரும் காவல் துறையினர், ஒருபுறம் பணப்பறிப்பு வழக்கையும், மறுபுறம் மருத்துவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளையும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in