கட்டிட அனுமதி இனி ரொம்ப ஈஸி… AI சாஃப்ட்வேர் கொண்டு வர CM அட்வைஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கட்டிட அனுமதி இனி ரொம்ப ஈஸி… AI சாஃப்ட்வேர் கொண்டு வர CM அட்வைஸ்..!!

Published

on

தமிழகத்தில் கட்டிட அனுமதி வழங்குவதை மேலும் எளிதாக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய சாஃப்ட்வேரை உருவாக்குமாறு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். தமிழக பட்ஜெட்டை ஒட்டி துறைவாரியாக அவர் தொடர் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வரும் நிலையில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படும் பழுதடைந்த 28,000 வீடுகளை மறுகட்டுமானம் செய்யும் பணிகளை எவ்வித தாமதமுமின்றி உடனே தொடங்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்களுக்குத் தேவையான வீட்டு வசதித் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in