யாரோட பேசிட்டு இருந்த..?” ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை நெரித்த கொடூர கணவன்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CINEMA

யாரோட பேசிட்டு இருந்த..?” ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை நெரித்த கொடூர கணவன்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில், தனது இரண்டாவது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த கணவன், பின்னர் நேராகக் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தீப் என்பவர் தனது இரண்டாவது மனைவி மதுவை அருகில் உள்ள மாந்தோப்பிற்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். மது ஷாம்லி பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு இளைஞருடன் தொலைபேசியில் தொடர்ந்து பேசி வந்ததாக எழுந்த சந்தேகமே இந்த கொடூரக் கொலைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

சந்தீப்பிற்கு கடந்த 2006-ஆம் ஆண்டு மதுவின் மூத்த சகோதரியான பிரீதியுடன் முதல் திருமணம் நடந்துள்ளது. திருமணமான மூன்று ஆண்டுகளில் நோய்வாய்ப்பட்டு பிரீதி உயிரிழந்த நிலையில், அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மனைவியின் மறைவுக்குப் பிறகு, சில மாதங்களிலேயே பிரீதியின் தங்கையான மதுவை சந்தீப்பிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ள நிலையில், மனைவியின் நடத்தை மீது கொண்ட சந்தேகத்தால் சந்தீப் இந்த கொடூர முடிவை எடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in