LATEST NEWS
பள்ளியா? அல்லது சித்திரவதை கூடமா..?!” தொடக்கப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு நேர்ந்த கொடுமை.. இணையத்தில் தீயாய் பரப்பவும் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் தாதிரி ஒன்றியத்திற்குட்பட்ட நூர்பூர் அரசு ஆரம்பப் பள்ளியில், படிக்க வந்த பிஞ்சு குழந்தைகளைக் கொண்டு கழிவுநீர் அடைப்புகளை அகற்றும் அவலம் அரங்கேறியுள்ளது. கல்வி கற்க வேண்டிய பள்ளி வளாகத்தில் மாணவர்களைக் கொண்டு துப்புரவுப் பணிகளைச் செய்ய கட்டாயப்படுத்துவதாகப் பள்ளி நிர்வாகத்தின் மீது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்த அவல நிலை குறித்த வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அப்பள்ளியின் வளாகத்தில் உள்ள கழிவுநீர் வடிகால் அமைப்பு முற்றிலும் செயலிழந்ததன் காரணமாக, பள்ளி மைதானம் மற்றும் வகுப்பறை நுழைவாயில்களில் அசுத்தமான கழிவுநீர் தேங்கி நின்றுள்ளது. இதனைச் சரிசெய்ய துப்புரவுப் பணியாளர்களை அழைக்காமல், அங்கு பயிலும் சிறு குழந்தைகளையே பள்ளி நிர்வாகம் பயன்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளிகளின் இந்த அவல நிலை மற்றும் பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல் குறித்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
