CRIME
“நெஞ்சே நடுங்குது.. இரத்தக் கறை படிந்த மண்வெட்டி..!” அண்ணனின் உயிரைப் பறித்த தம்பியின் அசுரத்தனமான கொலை வெறி.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் ஜேவார் காவல் எல்லைக்குட்பட்ட நிம்கா கிராமத்தில், நிலத் தகராறு காரணமாகத் தனது சொந்த அண்ணனையே மண்வெட்டியால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த தம்பியைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த சொத்துப் பிரச்சினை காரணமாக அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தம்பி, மறைத்து வைத்திருந்த மண்வெட்டியை எடுத்து அண்ணனைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொடூரக் கொலைச் சம்பவத்தை அரங்கேற்றிவிட்டுத் தப்பியோடிய குற்றவாளியைத் தேட ஜேவார் தனிப்படை போலீஸார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். தப்பியோடிய தம்பியைத் துரத்திப் பிடித்த போலீஸார் அவரைக் கைது செய்ததோடு, கொலைக்கு அவர் பயன்படுத்திய இரத்தக் கறை படிந்த மண்வெட்டியையும் சம்பவ இடத்திலிருந்து பறிமுதல் செய்துள்ளனர். நிலத்திற்காகப் பெற்ற அண்ணனையே தம்பி அடித்துக் கொன்ற இந்தத் துணிகரச் சம்பவம் நிம்கா கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
