“வாக்குறுதி என்ன ஆச்சு..? இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா..?” இரவோடு இரவாகச் செவிலியர்கள் கைது..! த.வெ.க. அரசுக்கு எதிராகக் கொந்தளித்த மு.க.ஸ்டாலின்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வாக்குறுதி என்ன ஆச்சு..? இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா..?” இரவோடு இரவாகச் செவிலியர்கள் கைது..! த.வெ.க. அரசுக்கு எதிராகக் கொந்தளித்த மு.க.ஸ்டாலின்..!!

Published

on

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்த செவிலியர்களை நள்ளிரவில் காவல்துறையினரை வைத்துக் கைது செய்துள்ள த.வெ.க. அரசின் நடவடிக்கைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கண்துடைப்பிற்காகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு முதுகில் குத்தும் த.வெ.க. அரசின் துரோகத்திற்குத் தற்போது செவிலியர்கள்தான் இரையாகியுள்ளனர். பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட வாழ்வாதார உரிமைகளுக்காக அறவழியில் போராடிய செவிலியர்களைக் காவல்துறையைக் கொண்டு கைது செய்த த.வெ.க. அரசின் அராஜக நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. போராடும் செவிலியர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த மனம் வராத அரசு, அவர்களை ஈவு இரக்கமின்றி கைது செய்ய மட்டும் துணிந்தது எவ்வாறு?

போராடிய செவிலியர்களின் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகக் கூறி அழைத்துச் சென்று கைது செய்ததாக அவர்களின் சட்ட ஆலோசகரே குற்றம்சாட்டியுள்ளார். அதேவேளையில், போராட்டக் களத்திலிருந்த செவிலியர்களும் இரவோடு இரவாக வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆதரவு தெரிவித்து, தேர்தலின் போது பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சியைப் பிடித்ததும் அதே கோரிக்கைக்காகப் போராடுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பது முரண்பாட்டின் உச்சமாகும். நிர்வாகத் திறனற்ற துக்ளக் நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் விஜயும் அவருடைய அமைச்சர்களும் பதில் சொல்ல வேண்டும்.

Advertisement

மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் போராட்டத்தைத் தொடர்ந்த செவிலியர்களைக் கைது செய்ததுதான் த.வெ.க. கூறும் ‘மாற்றமா’ அல்லது ஜனநாயகமா? பெண் காவல் அதிகாரி ஒருவர் “உங்க உயிர் முக்கியம்” என விரலை உயர்த்தி மிரட்டியது ஜனநாயக வில்லனின் குரலா என்பதைக் காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விளக்க வேண்டும். இல்லையெனில், செவிலியர்களை மிரட்டிக் கைது செய்த பெண் காவலர்களின் செயலை “சிங்கப்பெண் in action” என Reel செய்து, தனது virtual abuser-கள் மூலம் trend செய்து வழக்கம் போல விளம்பரம் தேடப் போகிறாரா?

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in