“இப்படியா அலட்சியமா பேசுவது..?” அக்காவின் கஷ்டத்தை மதிக்காமல் கெத்தாக பேசிய தம்பி… நேரலையில் நறுக்கென கேட்ட தொகுப்பாளர்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“இப்படியா அலட்சியமா பேசுவது..?” அக்காவின் கஷ்டத்தை மதிக்காமல் கெத்தாக பேசிய தம்பி… நேரலையில் நறுக்கென கேட்ட தொகுப்பாளர்..!!

Published

on

இன்று பல தொலைக்காட்சிகளில் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், மக்களின் அன்றாட வாழ்க்கையோடு ஒத்துப்போகும் தலைப்புகளைக் கொண்டு விவாதிக்கப்படும் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்து வருகின்றன. அந்த வகையில், தனியார் தொலைக்காட்சியில் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் ‘தமிழா தமிழா’ ரியாலிட்டி நிகழ்ச்சியில் வாரந்தோறும் ஒரு சுவாரஸ்யமான தலைப்பில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இந்த வாரம் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் “தனி ஆளாக குடும்பத்திற்காக உழைக்கும் பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்” என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் பிள்ளைகள், தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகச் சிறு வயதிலிருந்தே வேலைக்குச் சென்று தாங்கள் பட்ட துயரங்களையும் கஷ்டங்களையும் கண்ணீருடன் எடுத்துரைத்தனர்.https://youtu.be/oCQIP3szDZM

Advertisement

இதில் பங்கேற்ற இளைஞர் ஒருவரின் அக்கா, 8 வயதிலிருந்தே குடும்பத்துக்காக வேலைக்குச் சென்று கஷ்டப்பட்டு வருகிறார். ஆனால், அந்த இளைஞர் தான் எந்த வேலையும் செய்யாமல் இருந்து வருவதாகத் தொகுப்பாளரிடம் கூறியுள்ளார். மேலும், அந்த இளைஞர் சற்று தோரணையுடனும் அலட்சியத்துடனும் இதைக் கூறியதால், அக்காவின் கண்ணீரைக் கண்டு ஆத்திரமடைந்த தொகுப்பாளர் கோபத்தில் கொந்தளித்து அந்த இளைஞரைச் சரமாரியாகக் கண்டித்துப் பேசியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in