“என் புள்ள படம் இன்னைக்கு ரிலீஸ்..! மகனுக்காக தியேட்டருக்கு வந்த அம்மா சங்கீதா, தங்கை திவ்யா.. சோஷியல் மீடியாவை கலக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CINEMA

“என் புள்ள படம் இன்னைக்கு ரிலீஸ்..! மகனுக்காக தியேட்டருக்கு வந்த அம்மா சங்கீதா, தங்கை திவ்யா.. சோஷியல் மீடியாவை கலக்கும் வீடியோ..!!

Published

on

தமிழக முதலமைச்சரும் பிரபல நடிகருமான சி. ஜோசப் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் இன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியானது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் மற்றும் பரியா அப்துல்லா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://media.getlokalapp.com/videos-bucket//lokalapp-prd-1312163145/videos/17280440/17280440_ssstwitter.com_1790913737556_transcode_1227805.mp4

Advertisement

சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்ற இப்படத்தின் முதல் காட்சிக்கு இயக்குநர் ஜேசன் சஞ்சய் நேரில் வருகை தந்தார். அங்கே கூடியிருந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், ஆரவாரம் செய்தும் அவருக்கு உற்சாகமான முறையில் வரவேற்பு அளித்தனர். தனது முதல் படத்தின் வெளியீட்டுத் தருணத்தில் ரசிகர்களின் இந்த வரவேற்பு தமக்கு மிகுந்த நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளதாக ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

மேலும், மகனின் இந்த முக்கியப் மைல்கல்லைக் கொண்டாடும் விதமாக, அவரது தாயார் சங்கீதா மற்றும் சகோதரி திவ்யா சாஷா ஆகியோரும் கமலா திரையரங்கிற்கு வருகை தந்து ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். கடந்த சில காலமாக நிலவி வந்த பல்வேறு குடும்ப விவாதங்கள் மற்றும் வதந்திகளுக்குப் பிறகு, சங்கீதா தனது மகனின் கலைப் பயணத்திற்கு ஆதரவாகப் பொதுவெளியில் தோன்றும் முதல் முக்கிய நிகழ்வாக இது அமைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in