CINEMA
பிரபல நடிகையுடன் காதலில் ஜேசன் சஞ்சய்..? குண்டைத் தூக்கிப் போட்ட பயில்வான் ரங்கநாதன் – திரையுலகில் தீயாய் பரவும் பரபரப்பு வீடியோ..!!
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ஆகிய இருவரும் காதலித்து வருவதாகப் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ள தகவல் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இத்தகவலைப் பகிர்ந்துள்ளார். மேலும், இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகி வருவதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த காதல் வதந்திகள் குறித்து ஜேசன் சஞ்சய் தரப்பிலிருந்தோ அல்லது நடிகை ஜான்வி கபூர் தரப்பிலிருந்தோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. இருவரும் தங்களது காதல் விபரங்களை இதுவரை உறுதிப்படுத்தவும் இல்லை. ஜேசன் சஞ்சய் தற்பொழுது தனது முதல் திரைப்படத்தை இயக்கத் தயாராகி வரும் நிலையில், இந்தத் தகவல் சினிமா வட்டாரங்களில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே பாலிவுட் நடிகையான ஜான்வி கபூர், தொழிலதிபர் ஷிகர் பஹாரியா என்பவரைக் காதலித்து வருவதாகப் பாலிவுட் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. பல பொது நிகழ்ச்சிகளிலும் அவர்கள் ஒன்றாகக் கலந்துகொண்ட நிலையில், தற்பொழுது முதலமைச்சர் விஜய்யின் மகனுடன் இணைத்து வெளியாகியுள்ள இந்தப் புதிய தகவல் ஒட்டுமொத்தத் திரையுலகினரிடையேயும், சமூக வலைத்தளங்களிலும் தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது.
