“ஜெயிலர் 2-க்கு பதிலடியா..?” ‘ஒரு தலைவன், ஒரு தளபதி’ என அட்லீ பேசியதால் ரஜினி – CM விஜய் ரசிகர்கள் இடையே வெடித்த பூகம்பம்..! – cinefeeds
Connect with us

CINEMA

“ஜெயிலர் 2-க்கு பதிலடியா..?” ‘ஒரு தலைவன், ஒரு தளபதி’ என அட்லீ பேசியதால் ரஜினி – CM விஜய் ரசிகர்கள் இடையே வெடித்த பூகம்பம்..!

Published

on

திரைத்துறை விழா ஒன்றில் இயக்குநர் அட்லீ பேசிய பேச்சு, சமூக வலைத்தளங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் ரசிகர்களிடையே மீண்டும் ஒரு பெரிய மோதலைக் கிளப்பியுள்ளது. கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அட்லீ, “உலகில் ஒரு சூரியன், ஒரு நிலவு இருப்பது போலத் தமிழ் சினிமாவிற்கு ஒரே ஒரு தளபதிதான்” என்று விஜய்யை அரியணையில் ஏற்றிப் பாராட்டியுள்ளார். அவரது இந்த அதிரடிப் பேச்சு இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

முன்னதாக, நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் “ஒன் சன் ஒன் மூன்” என்ற பாடல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் பாடலில் வரும் “ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே ஒரு தலைவன்” என்ற வரிகள், அப்போது அரசியலுக்கு வந்த முதலமைச்சர் விஜய்யை மறைமுகமாகத் தாக்கி எழுதப்பட்டதாக நெட்டிசன்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கடுமையாக விவாதித்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in