பயங்கர விபத்து..! பிரபல பாலிவுட் நடிகைக்கு முதுகெலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள் ஷாக்..!! – cinefeeds
Connect with us

CINEMA

பயங்கர விபத்து..! பிரபல பாலிவுட் நடிகைக்கு முதுகெலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள் ஷாக்..!!

Published

on

பிரபல பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா இந்தோனேசியாவின் பாலி தீவிற்குத் தனது வேலை மற்றும் விடுமுறைக்காகச் சென்றிருந்த இடத்தில் எதிர்பாராதவிதமாகக் கடுமையான விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். இந்த விபத்தின் காரணமாக அவருக்கு முதுகெலும்பில் பலத்த முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் முதலில் பாலியில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து, அவருக்குச் சிறந்த உயர்தர சிகிச்சை அளிப்பதற்காக அவரது குழுவினர் சிறப்பு ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக அவரைப் பாலியில் இருந்து மும்பைக்கு பத்திரமாக அழைத்து வந்துள்ளனர். மும்பை விமான நிலையத்திற்கு ஸ்ட்ரெச்சரில் கொண்டு வரப்பட்ட அவர், உடனடியாக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குள்ள முன்னணி மருத்துவக் குழுவினர் அவருக்குத் தண்டுவடப் பகுதிக்கான முக்கிய அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உள்ளனர். இந்தச் சூழலில், அவரது உடல்நலனைக் கருத்தில் கொண்டு தங்களுக்குத் தகுந்த privacy அளிக்குமாறு அவரது மேலாளர் தரப்பு ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ]

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in