“அடச்சீ என்ன பொம்பளை இவ..?” 17 வயது சிறுவனைக் கட்டாயப்படுத்தி சீரழித்த கொடூரம்… கர்ப்பமான இளம்பெண் அதிரடி கைது.. குமரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!! – cinefeeds
Connect with us

CRIME

“அடச்சீ என்ன பொம்பளை இவ..?” 17 வயது சிறுவனைக் கட்டாயப்படுத்தி சீரழித்த கொடூரம்… கர்ப்பமான இளம்பெண் அதிரடி கைது.. குமரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

Published

on

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், உடல்நலக் குறைவு காரணமாகச் சிகிச்சைக்காகக் குழித்துறை அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதை அறியவந்தனர். தொடர்ந்து அவரிடம் கணவர் குறித்துக் கேட்டபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், சந்தேகமடைந்த மருத்துவர்கள் உடனடியாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அந்த இளம்பெண் குழித்துறையில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் விமானப் பணியாளர் பட்டயப் படிப்பு படித்து வந்துள்ளார். அதே வகுப்பில் பயின்ற களியக்காவிளையைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் இல்லாத நேரத்தில் அச்சிறுவனின் வீட்டிற்குச் சென்ற இளம்பெண், சிறுவனைக் கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் உறவில் ஈடுபட்டதால் கர்ப்பமானதும், அதனைத் தன் பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்து வைத்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, 17 வயது சிறுவனின் தாய் அளித்த புகாரின் பேரில், 19 வயது இளம்பெண் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதால், மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in