“ஐயோ வெளிய வர முடியல..!” இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் சிக்கி ஆந்திர பக்தர்.. இறுதியில் முடிந்த சோகம்.. நெஞ்சைப் பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

DISTRICT NEWS

“ஐயோ வெளிய வர முடியல..!” இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் சிக்கி ஆந்திர பக்தர்.. இறுதியில் முடிந்த சோகம்.. நெஞ்சைப் பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

ஆன்மீகப் பயணமாக திருவண்ணாமலை வந்த ஆந்திரப் பக்தரின் வாழ்வில் சோகம் நிகழ்ந்துள்ளது. அங்கிருக்கும் புகழ்பெற்ற இடுக்கு பிள்ளையார் கோயிலின் குறுகிய குகைப் பாதையில் சிக்கிக் கொண்ட அவர், உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களையும் பக்தர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மணிக்குமார் 36 வயது நபர் நேற்று இரவு குடும்பத்துடன் கிரிவலம் சென்றபோது, இடுக்கு பிள்ளையார் கோவிலில் உள்ள குறுகிய குகை வழியே படுத்தபடி நுழைய முயன்றுள்ளார். உடல் பருமன் காரணமாக வெளியே வர முடியாமல் குகையினுள்ளேயே மாட்டிக்கொண்ட அவர், கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கினார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக பக்தர்கள் அவரைப் போராடி வெளியே மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துத் திருவண்ணாமலை தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, உடல் பருமன் மற்றும் சுவாசப் பிரச்சனை உள்ள பக்தர்கள் இடுக்கு பிள்ளையார் கோவில் குகைப் பகுதிக்குள் நுழைவதைத் தவிர்க்க வேண்டும் எனப் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in