“எல்லாரும் உடனே ரீல்ஸ் பண்ணுங்க..! Gen Z-ஐ கவர புது பிளான்..! நீட் விவகாரப் போராட்டங்களுக்கு மத்தியில் அமைச்சர்களுக்கு மோடி உத்தரவு..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எல்லாரும் உடனே ரீல்ஸ் பண்ணுங்க..! Gen Z-ஐ கவர புது பிளான்..! நீட் விவகாரப் போராட்டங்களுக்கு மத்தியில் அமைச்சர்களுக்கு மோடி உத்தரவு..!!”

Published

on

நீட் தேர்வுத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் ‘Gen Z’ தலைமுறை இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய அமைச்சர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் இளைஞர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்கள் நேரத்தை அதிகம் இன்ஸ்டாகிராமில் செலவிடுவதைச் சுட்டிக்காட்டினார். எனவே, அரசின் திட்டங்களையும் நடவடிக்கைகளையும் இளைஞர்களுக்கு எளிதில் கொண்டு சேர்க்கும் வகையில், அமைச்சர்கள் இன்ஸ்டாகிராமில் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்றும், ரீல்ஸ்கள் மற்றும் நேரலை உரையாடல்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Advertisement

https://www.instagram.com/reel/DbLyA8tIo7x/?utm_source=ig_web_button_share_sheet

டெல்லி ஜந்தர் மந்தரில் கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வுத்தாள் கசிவு விவகாரங்களை விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்க ‘விரைவு நீதிமன்றங்கள்’ அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளதோடு, இளைஞர்களின் கருத்துகளுக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக நன்றியும் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in