CINEMA
ஹாலிவுட்டில் பெருஞ்சோகம்..! 74 வயதில் பிரபல இயக்குநர் மர்ம மரணம்… சோகத்தில் சினிமா உலகம்..!!
புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்பட இயக்குநரான சக் ரஸ்ஸல் கலிபோர்னியாவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். வீட்டில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது இறப்பிற்கான துல்லியமான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக அந்நாட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது மறைவுச் செய்தி உலகளவில் உள்ள திரைத்துறை பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திகில், நகைச்சுவை மற்றும் அதிரடித் திரைப்படங்களை இயக்குவதில் தனிமுத்திரை பதித்த சக் ரஸ்ஸல், ஜிம் கேரியின் புகழ்பெற்ற ‘தி மாஸ்க்’ , ‘தி ப்ளாப்’மற்றும் ‘தி ஸ்கார்பியன் கிங்’போன்ற பல மெகா ஹிட் திரைப்படங்களை இயக்கி உலகப் புகழ்பெற்றார். ஹாலிவுட் மட்டுமல்லாது, இந்தியத் திரையுலகிலும் தடம் பதித்த இவர், வித்யுத் ஜாம்வால் நடித்த ‘ஜங்லி’ என்ற பாலிவுட் படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
