சி.ஜே.பி தலைவர் அபிஜீத் திப்கேவுக்கு டைபாய்டு… டிரிப்ஸ் ஏறினாலும் போராட்டம் தொடரும்.! மருத்துவ படுக்கையிலிருந்தே கல்வி அமைச்சருக்கு எதிராகப் போர்க்கொடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சி.ஜே.பி தலைவர் அபிஜீத் திப்கேவுக்கு டைபாய்டு… டிரிப்ஸ் ஏறினாலும் போராட்டம் தொடரும்.! மருத்துவ படுக்கையிலிருந்தே கல்வி அமைச்சருக்கு எதிராகப் போர்க்கொடி..!!

Published

on

டெல்லியில் நடைபெற்று வரும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ நிறுவனர் அபிஜீத் திப்கேவுக்கு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, நடத்தப்பட்ட இரத்தப் பரிசோதனை முடிவில் இந்த பாக்டீரியா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மருத்துவச் சிகிச்சையில் இருக்கும் அபிஜீத் திப்கே, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தனது உடல்நிலை குறித்து விளக்கியுள்ளார். அதில், தாம் தினமும் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் நரம்பு வழியாகச் சொட்டு மருந்து சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நோய் பாதிப்பு இருந்தாலும் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரும் இந்த போராட்டம் ஓயாது என்றும், நாடு முழுவதும் அமைதியான முறையில் போராடி வரும் ஆதரவாளர்களுக்குத் தனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

Advertisement

https://www.instagram.com/reel/DbM2j_6iufk/?utm_source=ig_web_button_share_sheet

டைபாய்டு என்பது ‘சால்மோனெல்லா டைஃபி’ என்ற பாக்டீரியாவால் பரவும் ஒரு தொற்றாகும். அசுத்தமான உணவு மற்றும் குடிநீர் மூலமாகப் பரவும் இந்த நோய்க்கு, ஆரம்பக்கட்டத்திலேயே சரியான ஆண்டிபயாடிக் சிகிச்சைகள் எடுக்கப்படாவிட்டால் குடல் பாதிப்பு, உட்புற இரத்தப்போக்கு போன்ற தீவிரமான உடல்நலக் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in