LATEST NEWS
விவசாயிகளுக்கு குட் நியூஸ்..! பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி.. செங்கோட்டையன் கொடுத்த மாஸ் அப்டேட்..!!
பவானி அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக முக்கியத் தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார். விவசாயிகளின் முதன்மையான கோரிக்கையாக இருக்கும் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை என்று அவர் குறிப்பிட்ட தொனியுடன் எடுத்துரைத்தார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர், மாநில அரசுகள் இக்கட்டான நிதிச் சூழலில் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யும்போது மத்திய அரசு அதனை முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், மாநிலத்தின் நிதிநிலை சீரடைந்தவுடன் விவசாயிகளின் இந்தக் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்து, விவசாயிகளுக்குப் நம்பிக்கையளிக்கும் வகையில் உரையாற்றினார்.
