“கட்சிக்கு குடைச்சல் கொடுத்தது இவர் தானா..? எல்லா தடையும் தூக்கியாச்சு..” CVS-ஐ டார்கெட் செய்து வெளுத்து வாங்கிய EPS.. விழுப்புரம் அதிமுகவில் திடீர் புயல்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கட்சிக்கு குடைச்சல் கொடுத்தது இவர் தானா..? எல்லா தடையும் தூக்கியாச்சு..” CVS-ஐ டார்கெட் செய்து வெளுத்து வாங்கிய EPS.. விழுப்புரம் அதிமுகவில் திடீர் புயல்..!!!

Published

on

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் பேசிய அவர், விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்படும் அறிவிப்புகளைக் கட்சி நிர்வாகிகள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மாவட்டத்தில் இருந்த தடைகள் அனைத்தும் தற்போது நீக்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், இடையூறு ஏற்படுத்தும் சிலரை ஒருபோதும் திருத்த முடியாது என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தைச் சுட்டிக்காட்டும் வகையில் மறைமுகமாக விமர்த்துப் பேசினார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, விழுப்புரம் மாவட்டத்தில் விரைவில் ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார். அப்படி இடைத்தேர்தல் வரும்பட்சத்தில், கட்சி நிர்வாகிகள் அனைவரும் தீவிரமாகப் பணியாற்றி, விழுப்புரம் மாவட்டம் எப்போதும் அதிமுகவின் எஃகு கோட்டை என்பதை மீண்டும் ஒருமுறை தேர்தல் முடிவுகளின் மூலம் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று நிர்வாகிகளுக்குத் தொண்டர்க உற்சாகத்துடன் அழைப்பு விடுத்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in