#BREAKING: சர்ச்சைக்குரிய RTI அரசாணை வாபஸ்.. எழுந்த கண்டனங்களுக்கு பணிந்தது தவெக அரசு.. ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

#BREAKING: சர்ச்சைக்குரிய RTI அரசாணை வாபஸ்.. எழுந்த கண்டனங்களுக்கு பணிந்தது தவெக அரசு.. ..!!

Published

on

தமிழக அரசு சட்டம்-ஒழுங்கு தகவல்களை தகவல் அறியும் உரிமைச் (RTI) சட்டத்தின் கீழ் பெறுவதில் இருந்து விலக்கு அளித்து வெளியிட்ட அரசாணையை, எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பை அடுத்து தற்போது அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுள்ளது. முன்னதாக, மனிதவள மேலாண்மைத் துறை வெளியிட்ட அரசாணையின்படி, சட்டம்-ஒழுங்கு பிரிவை உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பாக வகைப்படுத்தி, இனி வகுப்புவாத மோதல்கள், அரசியல் போராட்டங்கள், மற்றும் லாக்-அப் மரணங்கள் போன்ற முக்கிய விபரங்களை RTI மூலம் பெற முடியாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் அறப்போர் இயக்கம் போன்ற சமூக நல அமைப்புகளிடம் இருந்து மிகக் கடுமையான கண்டனங்களும், அரசு வெளிப்படைத்தன்மையற்ற முறையில் செயல்படுவதாக விமர்சனங்களும் எழுந்தன. சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் களத்தில் எழுந்த இந்த அடுக்கடுக்கான அழுத்தத்திற்குப் பணிந்த தமிழக அரசு, எதிர்பார்த்தபடியே தனது முடிவிலிருந்து ‘யு-டர்ன்’ அடித்து, சட்டம்-ஒழுங்கு தகவல்களுக்கு விலக்கு அளித்த அந்த அரசாணையை முழுமையாக ரத்து செய்து வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in