“தாராபுரத்தில் தவெகவுக்கு பேரிடி..!” செங்கோட்டையனின் ரகசிய கணக்கால் வேட்பாளர் சத்தியபாமா கண்ணீர்.. வெளியான பரபரப்பு தகவல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தாராபுரத்தில் தவெகவுக்கு பேரிடி..!” செங்கோட்டையனின் ரகசிய கணக்கால் வேட்பாளர் சத்தியபாமா கண்ணீர்.. வெளியான பரபரப்பு தகவல்..!!

Published

on

அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தாராபுரம் இடைத்தேர்தல் களம் தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்குக் கடும் சவாலாக உருவெடுத்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்லும் இடங்களிலெல்லாம் பொதுமக்கள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து வருவதால், தவெக தேர்தல் களத்தில் கடுமையான பின்னடைவைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுமட்டுமன்றி, கொங்கு மண்டலப் பொறுப்பாளரான அமைச்சர் செங்கோட்டையன், தாராபுரம் தொகுதிப் பொறுப்பாளராக அமைச்சர் அருண்ராஜ் நியமிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்து, தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டாமல் ஒதுங்கியிருப்பதாக உட்கட்சிப் பூசல்கள் வெடித்துள்ளன. தவெக தோல்வியடைந்தால் அருண்ராஜை ஓரங்கட்டிவிட்டுத் தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்ளலாம் என்பதே செங்கோட்டையனின் ரகசியக் கணக்காக அரசியல் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.

மறுபுறம், தொகுதியின் சமூக ரீதியிலான வாக்குக் கணக்குகளைத் தங்களுக்குச் சாதகமாகத் திருப்ப முடியாமல் அருண்ராஜ் திணறி வருவதாகத் தெரிகிறது. தாராபுரத்தில் பெரும்பான்மையாக உள்ள கொங்கு வேளாளர் கவுண்டர் சமூக மக்கள், நாட்டு கவுண்டரான அருண்ராஜை ஏற்க மறுப்பதாகச் சொல்லப்படும் சூழலில், இந்த வாக்கு வங்கியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அதிமுக முன்னிலை வகித்து வருகிறது. தவெக தலைவர் விஜய் நேரடியாக வந்து ஒரு நாள் பிரச்சாரம் செய்தால் மட்டுமே இங்கு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற சூழல் நிலவினாலும், தற்போதைய கள நிலவரப்படி தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெறுவது கடினம் என்றே அரசியல் விமர்சகர்கள் தரப்பில் பேசப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in