ஐயோ கொடுமையே..! சுதந்திர தினத்துல இப்படியா நடக்கணும்..? வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று இளைஞர் சுட்டுக்கொலை..! பீகாரில் பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

ஐயோ கொடுமையே..! சுதந்திர தினத்துல இப்படியா நடக்கணும்..? வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று இளைஞர் சுட்டுக்கொலை..! பீகாரில் பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு நடுவே, பீகார் தலைநகர் பாட்னாவை அடுத்த சாலிம்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஷாபூர் கிராமத்தில் நெஞ்சை பதறவைக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. குஸ்ரூபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லோதிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீரு குமார் என்ற இளைஞர் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார். சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று நடந்த இந்த கொடூர சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது.

சம்பவத்தன்று காலை, மஜௌலி பஞ்சாயத்தின் தற்போதைய தலைவரான ஜுல்மி முகியா அவர்களின் மருமகனான சோனு குமார், வீருவின் வீட்டிற்கு வந்து “தேசியக் கொடி ஏற்ற செல்லலாம் வா” என்று அழைத்துள்ளார். குளித்துவிட்டு வருவதாக வீரு கூறிய நிலையில், சிறிது நேரத்தில் பஞ்சாயத்து தலைவரின் மற்ற இரு உறவினர்களான அஜித் குமார் மற்றும் பிரின்ஸ் குமார் ஆகியோர் வீட்டிற்கு வந்து வீருவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர். புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே, வீரு ரத்த வெள்ளத்தில் சுட்டுக் கொல்லப்பட்டு சாலையில் பிணமாகக் கிடப்பதாக கிராம மக்கள் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

Advertisement

தகவலறிந்த சாலிம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் மனோஜ் குமார் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலையாளி மற்றும் வீரு இருவரும் நண்பர்கள் என்பதும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பணத்தகராறு காரணமாகவே தலையில் சுட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இக்கொலை தொடர்பாக பஞ்சாயத்து தலைவரின் உறவினர்கள் மீது வீருவின் சகோதரர் ராம்தாரி யாதவ் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in