OMG: பள்ளிக்கு கிளம்பிய சில நிமிடங்களில் கடத்தப்பட்ட மாணவி.. சைக்கிளில் துரத்திய பக்கத்து வீட்டு இளைஞன்… பாழடைந்த பங்களாவில் பெரிய பெட்டிக்குள்… போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

OMG: பள்ளிக்கு கிளம்பிய சில நிமிடங்களில் கடத்தப்பட்ட மாணவி.. சைக்கிளில் துரத்திய பக்கத்து வீட்டு இளைஞன்… பாழடைந்த பங்களாவில் பெரிய பெட்டிக்குள்… போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

Published

on

பீகார் மாநிலம் சாரண் மாவட்டம் மஷ்ரக் நகராட்சிப் பகுதியில், பள்ளிக்குச் சென்ற 14 வயது மாணவி ஒருவரை மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. வியாழக்கிழமை காலை மாணவி வீட்டை விட்டுப் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, காரில் வந்த இரண்டு இளைஞர்கள் அவரைப் பலவந்தமாகக் காரில் இழுத்துப் போட்டுக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

இந்தக் கடத்தல் சம்பவத்தை தற்செயலாகப் பார்த்த அண்டை வீட்டு இளைஞரான நீரஜ் குமார், உடனடியாக மாணவியின் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். அதோடு நிற்காமல், தனது சைக்கிளிலேயே அந்தக் கடத்தல் காரைத் துரத்திச் சென்று தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார். இந்தத் தகவலின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட குடும்பத்தினரும், காவல் அவசர எண் 112 ரோந்துப் போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து, மஷ்ரக் இரயில்வே கேட் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் சந்தேகத்திற்குரிய கார் நின்றுகொண்டிருப்பதைப் போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு காரில் வந்த இரண்டு வாலிபர்களைப் பிடித்துப் போலீசார் தங்களின் பாணி விசாரணையை நடத்தியபோது, அவர்கள் மாணவியைக் கடத்தி மறைத்து வைத்துள்ள இடத்தை ஒப்புக்கொண்டனர். அவர்கள் காட்டிய இடத்திற்குப் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

அங்கு ஒரு கட்டுமானப் பணியில் இருக்கும் பாழடைந்த வீட்டின் உள்ளே வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பெட்டிக்குள்ளே கடத்தப்பட்ட 14 வயது சிறுமி அடைத்து வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சிகரமான காட்சி தெரியவந்தது. பெட்டியை உடைத்துச் சிறுமியைப் பத்திரமாக மீட்ட போலீசார், கடத்தலில் ஈடுபட்ட மஷ்ரக் பகுதியைச் சேர்ந்த இரண்டு குற்றவாளிகளையும் அதிரடியாகக் கைது செய்தனர். உரிய நேரத்தில் சமயோசிதமாகச் செயல்பட்டுச் சிறுமியின் உயிரைக் காப்பாற்ற உதவிய பக்கத்து வீட்டு இளைஞர் நீரஜுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in