LATEST NEWS
ஒரு வேளை சாப்பாடு கூட… நம்ம ஊர் வெயிலை விட அங்க 3 மடங்கு அதிகம்… வெளிநாட்டில் நான் பார்த்த உண்மை… சவுதியில் தொழிலாளர்கள் படும் துயரத்தை பகிர்ந்த அறந்தாங்கி நிஷா…!!
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனது எதார்த்தமான நகைச்சுவையால் மக்களின் மனங்களைக் கவர்ந்த அறந்தாங்கி நிஷா, சமீபத்தில் சவுதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் நேரில் கண்ட அனுபவங்கள் மற்றும் அங்கு வாழும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலை குறித்துப் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.
சவுதியில் நிலவும் கடும் வெப்பம் குறித்துப் பேசிய நிஷா, நமது ஊர் வெயிலை விட அங்கு மூன்று மடங்கு அதிகமாக வெயில் சுட்டெரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய கடுமையான சூழலிலும், குடும்பத்திற்காகச் சற்றும் தளராமல் உழைக்கும் ஆண்களை அவர் உண்மையான ‘ஆண் தேவதைகள்’ என்று மனதாரப் பாராட்டியுள்ளார்.
சொந்த பந்தங்களைப் பிரிந்து அயல்நாட்டில் வாழும் தொழிலாளர்கள், தங்களது ஒவ்வொரு வேளை உணவிலும் சிறு தொகையைக் கூட மிச்சப்படுத்தி ஊருக்கு அனுப்பி வைப்பதைக் கண்டு தாம் மிகவும் நெகிழ்ந்துபோனதாகத் தெரிவித்துள்ளார். நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் ஒரு வேளை உணவு கூட, அவர்களின் தியாகத்திற்கு நடுவே தேவாமிர்தமாக இருப்பதாகக் கூறி அவர் உருகியுள்ளார்.
தங்கள் பசியையும் ஆசைகளையும் தள்ளிவைத்து, குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக மட்டுமே வாழும் அவர்களின் உழைப்பையும் தியாகத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று கண்கள் கலங்க நிஷா கூறியுள்ளார். வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் இந்த வாழ்க்கைப் போராட்டத்தைக் குறித்து அவர் பகிர்ந்துள்ள உருக்கமானப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
