CRIME
“அடச்சீ நீங்கெல்லாம் மனுஷங்களா.. ?” சொத்துக்களை எழுதி வாங்கிட்டு பெற்றோரை நடுத்தெருவில் விட்ட மகன்கள்.. இறுதியில் முதிய தம்பதி எடுத்த விபரீத முடிவு.. மேஜை உலுக்கும் சம்பவம்..!!
தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தின் நாராயணகேட் மண்டலத்திற்குட்பட்ட சப்தா கே கிராமத்தில், தங்களுக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் மூன்று மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்த வயதான தம்பதியினர், அவர்களால் கைவிடப்பட்டு இறுதியில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. முங்கா நர்சாரெட்டி (88) மற்றும் அஞ்சம்மா (85) என்ற இந்தத் தம்பதியினர் தங்களது ஒட்டுமொத்த சொத்துக்களையும் சித்தாரெட்டி, கிருஷ்ணாரெட்டி, சங்காரெட்டி ஆகிய தங்களது மூன்று மகன்களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்துள்ளனர். ஆனால், சொத்து பிரிவினை நடந்த அன்றே மகன்கள் தங்களது பெற்றோரைத் தெருவில் தவிக்கவிட்டு அநாதரவாகக் கைவிட்டுள்ளனர். அஞ்சம்மாவின் உடல்நிலை மோசமடைந்து அவர்களால் சமைக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டபோது, பசியைத் தாங்க முடியாமல் அங்குள்ள அரசுப் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவைச் சாப்பிட்டுப் பல நாட்கள் உயிர் பிழைத்து வந்துள்ளனர்.
தங்களை மகன்கள் கவனிக்காததால், தங்களது வாழ்வாதாரத்திற்காகப் பிரித்துக் கொடுத்த நிலத்தில் இருந்து தலா ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் நிலத்தையாவது தங்களிடம் திருப்பி ஒப்படைக்குமாறு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அந்த முதியவர்கள் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளிடம் கண்ணீர் மல்கப் போராடியுள்ளனர். ஆனால், அவர்களது அலறல் அதிகாரிகளின் செவிகளில் விழாமல் போனதால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இறுதியில், உண்பதற்கு உணவுகூட இல்லாத விரக்தியிலும், கடுமையான மன உளைச்சலாலும் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழந்த முதிய தம்பதியினர், அங்கிருந்த ஒரு விவசாயக் கிணற்றில் குதித்து தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து உயிரிழந்த முதியவர்களின் பேரனான திருப்பதி ரெட்டி அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
