“சத்யபாமா காதில் அமைச்சர் சொன்ன அந்த ‘ரகசியம்’..!” மேடையிலேயே அழுத தவெக வேட்பாளர்.. தாராபுரத்தில் அரங்கேறிய பகீர் ட்விஸ்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சத்யபாமா காதில் அமைச்சர் சொன்ன அந்த ‘ரகசியம்’..!” மேடையிலேயே அழுத தவெக வேட்பாளர்.. தாராபுரத்தில் அரங்கேறிய பகீர் ட்விஸ்ட்..!!

Published

on

தாராபுரம் தேர்தல் பரப்புரையின் போது தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமாவின் காதில் ரகசியமாகப் பேசியது மற்றும் அவர் கண்ணீர் சிந்தியது தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு, அமைச்சர் ராஜ்மோகன் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். பரப்புரைக் கூட்டத்தில் சத்யபாமாவிடம் “நேரம் கருதி சுருக்கமாகப் பேசுங்கள்” என்று மட்டுமே தான் கூறியதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் காத்திருப்பதன் காரணமாகவே பேச்சை விரைவாக முடிக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும், ஒரு பெண்ணின் கடுமையான வலியையும் கண்ணீரையும் அரசியல் காரணங்களுக்காகத் தவறாகச் சித்தரித்து ஆதாரமின்றி விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் தான் தொகுப்பாளராக இருந்தபோதும், இதேபோல சுருக்கமாகப் பேசுமாறு பலரிடம் கூறியிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், யாரையும் யாரும் விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் இங்கு இல்லை என்றும், அவர்கள் ஒரு நல்ல தலைமையின் கீழ் இணைந்துள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். புதிய தலைமைச் செயலகம் விவகாரத்தில் அனைவரிடமும் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in