“ஐயோ கொடுமையே.. கர்மா பண்டிகை முடிந்து திரும்பிய 19 வயது பெண்.. கடத்தி சென்று 3 காமக்கொடூரர்களின் வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் பின்னணி.. – cinefeeds
Connect with us

CRIME

“ஐயோ கொடுமையே.. கர்மா பண்டிகை முடிந்து திரும்பிய 19 வயது பெண்.. கடத்தி சென்று 3 காமக்கொடூரர்களின் வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் பின்னணி..

Published

on

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராது காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கர்மா பண்டிகையைக் கொண்டாடிவிட்டுத் திரும்பிய 19 வயது இளம் பெண் ஒருவரை மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி நள்ளிரவில், சடேக்பூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிலிருந்து அந்தப் பெண் தனியாக நடந்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று மர்ம நபர்கள், அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக ஒரு பாழடைந்த தனிமையான இடத்திற்குக் கடத்திச் சென்று, அவரது கைபேசியைப் பறித்துக்கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளனர். பின்னர், அந்த மூன்று காடையர்களும் வரிசையாக அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் அந்தப் பெண்ணின் முகம் மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இச்சம்பவத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பெண் மிகுந்த பயத்துடனும் அதிர்ச்சியுடனும் தனது வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ராது காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மூன்று மர்ம நபர்கள் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளைப் பிடிப்பதற்காகக் காவல்துறையினர் தனிப்படை அமைத்து, சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ராஞ்சி சதர் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளின் மறைவிடங்களை நோக்கிப் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in