CRIME
“ஐயோ கடவுளே.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்..” மட்டன் கடை உரிமையாளரின் வெறிச்செயல்.. கையில் இருந்த ‘டாட்டூ’ ரகசியம்.. இன்ஸ்டாகிராம் பதிவால் அம்பலமான பின்னணி..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடா அருகே உள்ள இப்ராகிம்பட்டினம் பகுதியில், திருமண உறவைத் தாண்டிய உறவு காரணமாகக் கல்யாணி என்ற இந்துப் பெண், முகமது ஷாபி என்ற மட்டன் கடை உரிமையாளரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, உடல் 9 துண்டுகளாக வெட்டி வீசப்பட்ட கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரியாணி உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த கல்யாணி, தனது கணவரைப் பிரிந்து விஜயவாடாவைச் சேர்ந்த மற்றொரு நபருடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், அவருக்கும் முகமது ஷாபிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஷாபி கல்யாணியைக் கொலை செய்துள்ளார். பின்னர் ஆதாரங்களை மறைப்பதற்காக அவரது உடலை 9 துண்டுகளாக வெட்டி, பைகளில் அடைத்து என்.டி.டி.பி.எஸ் அனல் மின் நிலையத்துடன் இணைக்கப்பட்ட கோலபுடி குளிரூட்டும் கால்வாயில் வீசியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதியிலிருந்து மங்களகிரியிலிருந்து காணாமல் போன கல்யாணியின் சடலத்தைக் கண்டெடுத்த காவல்துறையினருக்கு, அவரது கையில் இருந்த பச்சை குத்தப்பட்ட அடையாளமும், சமூக ஊடகப் புகைப்படங்களும் கொலையைத் துப்பறிய முக்கிய ஆதாரங்களாக அமைந்தன. காவல்துறையினர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பதிவைப் பார்த்த கல்யாணியின் சகோதரர், அந்த உடல் தனது சகோதரியுடையதுதான் என்பதை அடையாளம் காட்டினார். இந்தத் திட்டமிட்ட கொடூரக் கொலையைச் செய்த குற்றவாளி முகமது ஷாபியைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
