உச்சக்கட்ட கொடூரம்..! மைத்துனியுடன் தனிமையில் இருந்த வாலிபர்.. மரத்தில் கட்டி வைத்து சிறுநீர் குடிக்க வைத்த மக்கள்.. போலீஸ் அதிரடி ஆக்ஷன்..!! – cinefeeds
Connect with us

CRIME

உச்சக்கட்ட கொடூரம்..! மைத்துனியுடன் தனிமையில் இருந்த வாலிபர்.. மரத்தில் கட்டி வைத்து சிறுநீர் குடிக்க வைத்த மக்கள்.. போலீஸ் அதிரடி ஆக்ஷன்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் அக்ராபாத் காவல் எல்லைக்குட்பட்ட துபியா பஞ்சாரா கிராமத்தில், திருமண உறவைத் தாண்டிய உறவு வைத்திருந்ததாகக் கூறி வாலிபர் ஒருவரைப் பிடித்து மொட்டையடித்து, முகத்தில் கரியைப் பூசி, சிறுநீர் குடிக்க வைத்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அக்ராபாத் காவல் எல்லைக்குட்பட்ட பில்கோரா கிராமத்தைச் சேர்ந்த திருமணமான வாலிபர் ஒருவர், தனது சகோதரியின் கணவருடைய தம்பியின் மனைவியுடன் பழகி வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி தனது சகோதரி வீட்டுக்கு வந்திருந்த அந்த வாலிபர், காட்டில் அந்தப் பெண்ணுடன் தனிமையில் இருந்தபோது கிராம மக்களிடம் சிக்கியுள்ளார்.

ஆத்திரமடைந்த கிராமத்தினர் அவரைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டி வைத்து, காலணிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், அவரது தலைமுடி மற்றும் தாடி-மீசையை அரைகுறையாகச் சவரம் செய்து, முகத்தில் கரியைப் பூசியதோடு, அவருக்குக் கட்டாயப்படுத்திச் சிறுநீரையும் குடிக்க வைத்துள்ளனர். இந்தத் தாலிபான் பாணி கொடூரத் தண்டனை வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, உடனடியாக விசாரணையில் இறங்கிய அக்ராபாத் காவல் நிலையப் பொறுப்பாளர் பங்கஜ் குமார் மிஸ்ரா, பாதிக்கப்பட்ட நபரின் புகாரின் பேரில் 4 பெண்கள் உட்பட மொத்தம் 7 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in