“அப்பா என்னை மன்னிச்சி ஏத்துக்கோங்க…” காதல் மயக்கத்தில் வீட்டை விட்டு ஓடிய பெண்…  கணவரின் துரோகத்தால் வாழ்க்கையே போச்சு… வைரலாகும் கண்ணீர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அப்பா என்னை மன்னிச்சி ஏத்துக்கோங்க…” காதல் மயக்கத்தில் வீட்டை விட்டு ஓடிய பெண்…  கணவரின் துரோகத்தால் வாழ்க்கையே போச்சு… வைரலாகும் கண்ணீர் வீடியோ..!!

Published

on

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை எதிர்த்து, காதலித்தவனைக் கரம்பிடித்த அந்தப் பெண்ணின் வாழ்க்கை இன்று வீடற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பெற்றோரைத் துறந்து, காதலனோடு ஓடிப்போய் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கி, இரண்டு குழந்தைகளுக்கும் தாயானார். சினிமா கதையைப் போலத் தொடங்கிய அந்த வாழ்க்கை, ஆரம்பத்தில் அனைத்து வழிகளிலும் மிகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் மட்டுமே இருந்தது.

ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை; அதிர்ச்சியளிக்கும் உண்மை ஒன்று வெளிவந்தது. கணவன் தன் உண்மையான சாதிப் பின்னணியை மறைத்துப் பொய் சொல்லி திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. இந்த துரோகத்தால் அவர்களுக்குள் வெடித்த மோதலும் பூசலும் எல்லை மீறியது. மனமுடைந்த அந்தப் பெண், வேறு வழியின்றி தன் நியாயத்தைச் சமூக வலைதளங்களில் வீடியோவாகப் பதிவிட, அது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி இறுதியில் கணவனைச் சிறைக்கு அனுப்பியது.

Advertisement

இன்று அந்தப் பெண் முற்றிலும் அனாதையாக, தனியாக நிற்கிறார். தினமும் காலையில் ஒரு புதிய நம்பிக்கையோடு விடியும் அவரது நாள், கண்ணீரோடு முடிகிறது. “செய்த தவறை மன்னித்து என்னை மீண்டும் ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று தன் பெற்றோரிடம் கதறி அழுதபடி தினமும் அவர் வெளியிடும் வீடியோக்கள், பார்ப்போரின் நெஞ்சைப் பிழியும் சோகக் கதையாக மாறியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in