“இருடி உனக்கு இருக்கு..!” ஓடும் ரயிலில் பெண் பயணிகளை வெறித்துப் பார்த்து வீடியோ எடுத்த ஆசாமி.. இறுதியில் பெண்கள் செய்த மாஸ் சம்பவம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இருடி உனக்கு இருக்கு..!” ஓடும் ரயிலில் பெண் பயணிகளை வெறித்துப் பார்த்து வீடியோ எடுத்த ஆசாமி.. இறுதியில் பெண்கள் செய்த மாஸ் சம்பவம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

Published

on

டெல்லி மெட்ரோவில் பெண் பயணிகளுக்கு நேர்ந்த பாதுகாப்பற்ற அனுபவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. மாலை நேரத்தில் லோக் நாயக் பவனில் இருந்து கிரீன் பார்க் நோக்கி பயணித்த மொட்ரோ ரயிலில் இரு பெண்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதே பெட்டியில் அருகே அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயது நபர், அந்தப் பெண்களின் அனுமதியின்றி அவர்களைத் தனது மொபைல் போனில் ரகசியமாக படம்பிடித்துள்ளார். அவர் தங்களைப் பதிவு செய்வதைக் கண்டுபிடித்த பெண்கள், அதைக் கண்டிக்கும் வகையில் பார்த்தபோதும் அந்த நபர் சற்றும் கூச்சமின்றி தொடர்ந்து அவர்களை முகம்சுளிக்கும் வகையில் முறைத்துப் பார்த்தவாறே இருந்துள்ளார்.

https://www.instagram.com/reel/DbxwM-XTCDE/?utm_source=ig_embed&ig_rid=AvuHiiph19oHHsmmfmKalOZ

Advertisement

இதனால் சந்தேகமடைந்த பெண்கள், உடனடியாக அந்த நபரிடம் தைரியமாக வாக்குவாதம் செய்து அவரது மொபைல் போனைக் காட்டுமாறு வற்புறுத்தியுள்ளனர். தான் எந்த வீடியோவும் எடுக்கவில்லை எனச் சாதித்த அந்த நபர், பெண்கள் பார்க்கும்போதே அவசர அவசரமாகத் தனது போனில் இருந்த சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் ‘டெலிட்’ செய்துள்ளார். பின்னர் போனில் எதுவும் இல்லை எனக் கூறி அவர்களிடம் காண்பித்துள்ளார். ஆனால் சாதுரியமாகச் செயல்பட்ட அந்தப் பெண்கள், போனின் ‘ரீசைக்கிள் பின்’ (Recycle Bin) பகுதியைச் சோதித்தபோது, தங்களை ரகசியமாக எடுத்த வீடியோக்கள் அதில் இருப்பதைக் கையும் களவுமாகக் கண்டுபிடித்தனர்.

இந்த அத்துமீறலை அந்த இரு பெண்களும் தட்டிக்கேட்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாகப் பரவி வருகிறது. ரயிலில் சக பயணிகள் பலரும் இதைப் பார்த்துக்கொண்டு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக வேடிக்கை பார்த்ததையும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாகக் காவல்துறையிடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in