நெஞ்சடைக்கும் காட்சி..! அப்பா சாமி எப்படியாவது மழையை கொடு… கைகட்டி முதலை முன்னாடி நின்ன மக்கள்… தெலங்கானாவில் நடந்த விசித்திரம்… ஓடிவந்த அதிகாரிகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நெஞ்சடைக்கும் காட்சி..! அப்பா சாமி எப்படியாவது மழையை கொடு… கைகட்டி முதலை முன்னாடி நின்ன மக்கள்… தெலங்கானாவில் நடந்த விசித்திரம்… ஓடிவந்த அதிகாரிகள்..!!

Published

on

தெலங்கானாவில் கிருஷ்ணா நதியில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கிய முதலை ஒன்றை, அப்பகுதி மக்கள் ‘வருண பகவானின் வாகனம்’ எனக் கூறி பயபக்தியுடன் வழிபட்ட வினோத வீடியோ சமூக வலைத்தளங்களில் (SM) தீயாய் பரவி வருகிறது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகக் கரை ஒதுங்கிய அந்த முதலையைக் கண்ட உள்ளூர் மக்கள், அதனைத் துன்புறுத்தாமல் பாதுகாப்பாகப் பிடித்தனர். பின்னர், மழைக்கடவுளான வருண பகவானின் தூதனாக அதை நினைத்து, அதன் முன்னமர்ந்து தங்கள் கிராமத்திற்கு நல்ல மழை பொழிய வேண்டும் என தேங்காய், பழம் வைத்து விநோத வழிபாடு நடத்தினர்.

இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள், மக்களிடம் இருந்த முதலையை பத்திரமாக மீட்டனர். பின்னர், அந்த முதலையை மீண்டும் கிருஷ்ணா நதியிலேயே பாதுகாப்பாகக் கொண்டு போய் விட்டனர். அப்போது, வனவிலங்குகளின் மிக அருகில் சென்று இதுபோன்று வழிபாடு நடத்துவது உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி தவறு என்றும் கூறி பொதுமக்களுக்கு அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கையை விடுத்தனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in