அடக்கொடுமையே… திடீரென திறக்கப்பட்ட கார் கதவு… தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த பைக் ஓட்டுநர்..! விபத்தை ஏற்படுத்திவிட்டு நிதானமாக காரில் பறந்த குடும்பம்… சூரத்தில் நடந்த பகீர் சம்பவம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கொடுமையே… திடீரென திறக்கப்பட்ட கார் கதவு… தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த பைக் ஓட்டுநர்..! விபத்தை ஏற்படுத்திவிட்டு நிதானமாக காரில் பறந்த குடும்பம்… சூரத்தில் நடந்த பகீர் சம்பவம்…!!

Published

on

குஜராத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த காரில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் கார் கதவை திறந்தபோது, காருக்கு பின்னால் பைக்கில் வந்த நபர் மீது, காரின் கதவு பலமாக மோதியதில், பைக்கில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குஜராத்தின் சூரத் பகுதியில் 56 வயதான முகமது அமீன் உஸ்மான் கனி என்பவர் அந்த பகுதியில் உள்ள ரிவர் பார்க் அபார்ட்மெண்ட்ஸில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இதையடுத்து சம்பவம் நடந்த அன்று கடைக்கு செல்வதற்காக அந்த நபர் பைக்கில் சாலையில் வந்து கொண்டிருந்தார். அங்கு சாலை ஓரத்தில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த காரில் பின்புறம் அமர்ந்திருந்த ஒரு பெண், திடீரென கார் கதவை திறந்தார். அப்போது பைக்கில் அந்த வழியாக வந்து கொண்டிருந்த முகமது அமீன், கார் கதவின் மீது வேகமாக வந்து மோதினார்.

Advertisement

இதையடுத்து முகமது அமீன் தனது பைக்கில் இருந்து தூக்கி எறியப்பட்டு சாலையில் விழுந்தார். இதற்கிடையில் காரில் வந்த குடும்பத்தினர் சாலையில் மயங்கி கிடப்பவரை பார்த்துவிட்டு, தாங்கள் வந்த காரில் அந்த இடத்தை விட்டு சென்றனர். பின்னர் அவரது தலையிலிருந்து ரத்தம் வழிந்து, சாலையில் மயங்கி விழுந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர், நான்கு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்தார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக, காரில் இருந்த நபர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in