LATEST NEWS
“மக்களின் எண்ணத்தைப் பொய்யாக்கியவர் CM விஜய்..!” கேரளா அமைச்சர் ரமேஷ் சென்னிதலா அதிரடிப் பேச்சு.. பரபரக்கும் அரசியல் களம்..!!
கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதலா அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், தமிழக முதல்வர் விஜய் குறித்துப் பாராட்டிப் பேசியுள்ளார். “விஜய்க்கு அரசியல் தெரியாமல் வந்துவிட்டார் என்ற பொதுமக்களின் எண்ணத்தை அவர் முற்றிலும் பொய்யாக்கியுள்ளார்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், முதல்வர் விஜய் தற்போதைய அரசியலை மிக நல்ல விதத்தில் கையாண்டு வருவதாகவும், அரசு நிர்வாக செயல்பாடுகளில் 100 சதவீதம் தொழில்முறை சார்ந்த (Professional) அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறார் என்றும் ரமேஷ் சென்னிதலா தனது பேட்டியில் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.
சினிமாத் துறையில் இருந்து அரசியல் மற்றும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த விஜய்க்கு அரசு நிர்வாகத்தைப் பற்றியோ அல்லது அரசியல் நுணுக்கங்களைப் பற்றியோ என்ன தெரிந்திருக்கப் போகிறது என்று ஆரம்பத்தில் மக்கள் நினைத்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால், திறம்படச் செயல்பட்டு அந்தத் தவறான நினைப்பையெல்லாம் முதல்வர் விஜய் தற்பொழுது தவிடுபொடியாக்கி விட்டார் என்று அமைச்சர் ரமேஷ் சென்னிதலா பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த நேர்காணல் தற்பொழுது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பரவலான கவனத்தைப் பெற்று வருகிறது.
