“பிகிலுக்கு ஓட்டுப் போட்டல… இப்ப திகில் திகில்னு விலை ஏறுது..!” முதல்வர் விஜய்யை வம்புக்கு இழுத்த திமுக ஆர்.எஸ்.பாரதி.. பரபரக்கும் அரசியல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பிகிலுக்கு ஓட்டுப் போட்டல… இப்ப திகில் திகில்னு விலை ஏறுது..!” முதல்வர் விஜய்யை வம்புக்கு இழுத்த திமுக ஆர்.எஸ்.பாரதி.. பரபரக்கும் அரசியல் களம்..!!

Published

on

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் மற்றும் அவரது அரசு நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். சட்டமன்றத்தில் விஜய் “அரசின் மூன்று முக்கிய ஊழல் கோப்புகள் தன்னிடம் தயாராக உள்ளன” என்று கூறியதை பூச்சாண்டி வேலை என ஆர்.எஸ்.பாரதி சாடியுள்ளார். சிஏஜி தணிக்கை அறிக்கை என்பது அனைத்து அரசுகளிலும் வழக்கமாகத் தாக்கல் செய்யப்படக் கூடிய ஒன்றுதான் என்றும், இதைப் பற்றி ஒன்றும் தெரியாமல் விஜய் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்துகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், “பிகிலுக்கு ஓட்டுப் போட்டீர்கள்… இப்போது திகில் திகில் என விலைவாசி ஏறுகிறது” என்று சினிமா பாணியில் ஆர்.எஸ்.பாரதி எள்ளலுடன் விமர்சித்துள்ளார். தற்போதைய ஆட்சி முறையால் விலைவாசி உயர்ந்து மக்கள் அவதிப்படும் சூழல் இன்னும் 6 மாதங்களில் தீவிரமாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அந்த இக்கட்டான நேரத்தில் இதே மக்கள் மீண்டும் திமுகவின் துரைமுருகன் வீட்டு வாசலில் வந்து, ‘நீங்கள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று கையேந்தி நிற்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றும் அவர் தனது பேச்சில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in