LATEST NEWS
“அய்யய்யோ ரிவர்ஸ் எடுங்க… ரிவர்ஸ் எடுங்க..!” இரண்டு பேருந்துகளுக்கு இடையே நசுங்கிய 50 வயது முதியவர்.. அலறிய பொதுமக்கள்.. திக் திக் வீடியோ..!!
உத்தரப்பிரதேச மாநிலம் புடான் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில், இரண்டு பேருந்துகளுக்கு இடையே சைக்கிளுடன் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்த பிரமோத் (50) என்ற முதியவர், அக்கம் பக்கத்தினரின் அலறல் சத்தத்தால் நூலிழையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். பேருந்து நிலையத்தில் ஏற்கனவே ஒரு பேருந்து நிறுத்தப்பட்டிருந்த வேளையில், மற்றொரு பேருந்தின் ஓட்டுநர் தனது வாகனத்தை அதன் மிக அருகில் அஜாக்கிரதையாக இயக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பிரமோத், கண் இமைக்கும் நேரத்தில் அந்த இரண்டு பேருந்துகளுக்கும் நடுவே மாட்டிக்கொண்டு நசுங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் சத்தமிட்டு அலறியதை அடுத்து, ஓட்டுநர் உடனடியாகப் பேருந்தை நிறுத்திவிட்டுப் பின்னோக்கி எடுத்தார். பொதுமக்கள் அனைவரும் உடனடியாகச் செயல்பட்டு, பேருந்துகளுக்கு இடையே நசுங்கிக் கொண்டிருந்த பிரமோத்தை எவ்வித காயமும் இன்றி பத்திரமாக வெளியே இழுத்து மீட்டனர்; எனினும் அவரது சைக்கிள் முற்றிலும் சேதமடைந்தது. பேருந்து நிலையப் பகுதியில் ஓட்டுநரின் இத்தகைய அஜாக்கிரதை செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, விபத்தின் திக் திக் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.
