LATEST NEWS
“தலைவரை உடனே வரச்சொல்லுங்க..!” தாராபுரத்தில் தவெக-வுக்கு பின்னடைவா..? அமைச்சர் N.ஆனந்தை அலறவிட்ட உள்ளூர் நிர்வாகிகள்.. கடும் கலக்கத்தில் முதல்வர் விஜய்..!!
தமிழக இடைத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் தவெகவின் வெற்றி வாய்ப்பு சாதகமாக இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளதால், தமிழக முதலமைச்சர் விஜய் கடும் கலக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இரண்டு தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான நாமே எளிதாக வென்றுவிடலாம் என்ற அசாத்திய நம்பிக்கையில் முதலமைச்சர் விஜய் இருந்துள்ளார். ஆனால், கள நிலவரம் தங்களுக்கு முற்றிலும் எதிராக இருப்பதை உணர்ந்த தாராபுரம் உள்ளூர் நிர்வாகிகள், “இங்கு நிலைமை சரியில்லை, கட்சித் தலைவரை உடனே நேரில் பரப்புரைக்கு வரச் சொல்லுங்கள்” என்று அக்கட்சியின் அமைச்சர் என். ஆனந்தை அவசரப்படுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
தொகுதியில் நிலவும் இந்தச் சுணக்கமான சூழலையும், உள்ளூர் நிர்வாகிகளின் அவசரக் கோரிக்கையையும் கேட்டு முதலமைச்சர் விஜய் சற்று அதிர்ச்சியிலும் கலக்கத்திலும் ஆழ்ந்துள்ளதாகத் தெரிகிறது. இடைத்தேர்தல் களம் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக மாறும் என எதிர்பார்த்திருந்த வேளையில், தாராபுரத்தில் தவெகவிற்கு ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு கட்சி மேலிடத்தை உன்னிப்பாகக் கவனிக்க வைத்துள்ளதோடு, தேர்தல் வியூகங்களை அவசரமாக மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளியுள்ளது.
