அய்யோ பாவம்… 2 மகன்களையும் நெஞ்சோடு அணைத்தபடி அதிவேக மின்சார ரெயில் முன் பாய்ந்த இளம் தாய்…! வறுமை காரணமா..? குடும்பப் பிரச்சினையா..? ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ பாவம்… 2 மகன்களையும் நெஞ்சோடு அணைத்தபடி அதிவேக மின்சார ரெயில் முன் பாய்ந்த இளம் தாய்…! வறுமை காரணமா..? குடும்பப் பிரச்சினையா..? ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை..!!

Published

on

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த மங்கம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த அம்மிக்கல் தொழிலாளியான கோட்டையா என்பவரின் மனைவி வள்ளி. இவர்களுக்கு பரத், சந்தோஷ் ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோட்டையா உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், வள்ளி தனது இரண்டு குழந்தைகளுடன் மங்கம்மாபேட்டையில் வசித்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலை வீட்டில் இருந்த தனது இரண்டு மகன்களையும் வெளியே அழைத்துச் சென்ற வள்ளி, அரக்கோணம் – திருத்தணி ரெயில் நிலையங்களுக்கு இடையே மங்கம்மாபேட்டை வழித்தடத்தில், அரக்கோணத்தில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்ற மின்சார ரெயிலின் முன் குழந்தைகளை அணைத்தபடி பாய்ந்துள்ளார். இதில் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி தாய் மற்றும் இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

தகவலறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் இறந்ததால் ஏற்பட்ட வறுமை காரணமா அல்லது குடும்பக் கருத்து வேறுபாடு காரணமா என ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in