LATEST NEWS
“காலனை வென்ற 94 வயது முதியவர்..!” நேபாளத்தை உலுக்கிய இயற்கை சீற்றம்… இடிபாடுகளுக்கு நடுவே உலகையே வியக்கவைத்த மூதாட்டி.. நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!
நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரமான காட்டாற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, அங்குள்ள அரசு முதியோர் இல்லம் ஒன்று முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. அந்தப் பேரழிவின் இடிபாடுகளுக்குள் சிக்கிய 94 வயதான மூதாட்டி குணகேசரி போரா என்பவர், பல மணி நேரங்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நேபாள ராணுவத்தினர் தங்களது மீட்புப் பணியின் போது, மண் மற்றும் கட்டிட இடிபாடுகளுக்கு நடுவே அவர் உயிருடன் இருப்பதை உற்றுக் கவனித்து, ஹி்டாச்சி இயந்திரத்தின் உதவியோடு அவரைப் பத்திரமாக வெளியே எடுத்தனர். இந்த முதியோர் இல்லம் வெள்ளம் மற்றும் சேற்றினால் முழுமையாகத் துடைத்து எறியப்பட்ட நிலையில், அங்கிருந்தவர்களில் உயிருடன் மீட்கப்பட்ட ஒரே நபர் இவர் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட அவர் உடனடியாக காத்மாண்டு துயர சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அதிர்ச்சியின் காரணமாகவும், முதுமை மறதி நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்த அவரால் ஆரம்பத்தில் பேசவோ, தனது பெயரைக் கூறவோ கூட முடியவில்லை. பின்னர், அவரது உறவினர் ஒருவர் மூலமே அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டது. இந்த கோர விபத்தில் இருந்து அவர் அதிசயத்தக்க வகையில் உயிர் பிழைத்ததும், அவரை ராணுவத்தினர் மீட்கும் காட்சிகளும் நேபாளப் பேரழிவின் மிக முக்கியமான மற்றும் நெகிழ்ச்சியான வரலாற்றுப் பதிவாக மாறியுள்ளன.
