“பாதுகாப்பைக் குறைப்பது ஏற்புடையதல்ல…! பழையபடி Z+ செக்யூரிட்டி வேணும்..!” ஸ்டாலினுக்காக திருச்சி மண்ணில் களமிறங்கிய திருமாவளவன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பாதுகாப்பைக் குறைப்பது ஏற்புடையதல்ல…! பழையபடி Z+ செக்யூரிட்டி வேணும்..!” ஸ்டாலினுக்காக திருச்சி மண்ணில் களமிறங்கிய திருமாவளவன்..!!

Published

on

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பைக் குறைப்பது ஏற்புடையதல்ல என்றும், அவருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட Z+ பாதுகாப்பை அரசு மீண்டும் வழங்க வேண்டும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தலைவர்களின் பாதுகாப்பில் அரசியல் கணக்குகளைக் காட்டக் கூடாது எனக் குறிப்பிட்டு இக்கோரிக்கையை முன்வைத்தார்.

மேலும், அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது குறித்து விவாதித்த அவர், இந்தத் தவறுக்குப் பின்னால் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுவதாகக் சுட்டிக்காட்டினார். இத்தகைய முக்கியமான தலைவர்களின் பெயர்கள் விடுக்கப்பட்டது குறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in